Sunday, August 25, 2013

சபையைக் கலக்கிய சபாஷ் சிறுமி!




25 August 2013

சபையைக் கலக்கிய சபாஷ் சிறுமி!



1932-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி சென்னை சங்கீத வித்வத் சபை நிரம்பி வழிந்தது. சங்கீத மேதை அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் கச்சேரி என்றால் சும்மாவா? இருக்கை கிடைக்காமல் ரசிகர்கள் ஆங்காங்கே நின்றுகொண்டிருந்தனர்.
 சபையில் திடீர் பரபரப்பு.
 ""அரியக்குடிக்கு உடம்பு சரியில்லையாம்..''
 ""சபை நெறைஞ்சிருக்கு... இப்போ என்ன பண்றது?''
 ""எள் போட்டா எண்ணை ஆகிற அளவுக்குக் கூட்டம். கச்சேரி இல்லைன்னு சொல்லமுடியாது. வேற யாருடைய கச்சேரியாவது ஏற்பாடு பண்ணியே ஆகணும்..''
 ""அரியக்குடி பாடற இடத்தில யாரைப் பாட வைக்கிறது?''
 இந்த சம்பாஷணைக்குப் பிறகு, அந்த சிறுமியைப் பாடவைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
 ""16 வயசு பொண்ணு என்னத்த பாடிடப் போறாள்? ஏதோ பாடட்டும். கேட்டுத்தான் பார்ப்போமே....'' என்று அரைமனதுடன் ரசிகர்கள் கேட்க ஆரம்பித்தனர்.
 வர்ணம், கீர்த்தனை, ஸ்வரம், நிரவல் என்று ஓர் அம்சம் கூட விடாமல் அத்தனையிலும் பிளந்துகட்டினாள் சிறுமி. கச்சேரி முடிந்ததும், சபை அதிரும் அளவுக்கு கைத்தட்டல் சத்தம். ரசிகர்கள் எல்லாரும் சிறுமியை மொய்த்தெடுத்தனர்.
 16 வயதினிலேயே ஒட்டுமொத்த சபையையும் கட்டிப்போட்ட சிறுமி... வேறு யார்? சங்கீத கலாநிதி எம்.எஸ். சுப்புலட்சுமிதான்!

No comments:

Post a Comment