செய்திக்குறிப்பு
தி சங்கர நேத்ராலயா அகாடெமி
நடத்தும்
சுகாதாரத் துறையில் தொடர் விநியோக மேலாண்மை கருத்தரங்கு
(Supply Chain Management in Healthcare Management)
அனுமதி இலவசம்
நாள் : ஆகஸ்ட் 17 2013 பிற்பகல் 2 30 மணிமுதல் மாலை 4 30 மணி
இடம்: ஸ்ரீ வி டி ஸ்வாமி ஆடிட்டோரியம், 7 வது மாடி, கேஎன் பிர்வோ
கட்டிடம், சங்கர நேத்ராலயா, 18 கல்லூரி சாலை, சென்னை 600 006.
சுகாதாரத்துறை இன்று உலகின் மிகப் பெரிய அவசியமான துறையாகவும் மிக வேகமாக வளர்ந்து வரும் துறையாகவும் கருதப்படுகிறது. சுகாதாரத்துறையோடு தொடர்புடைய சுகாதார கருவிகள் தயாரிப்பு மற்றும் அவற்றின் விநியோகம், மருந்துகள் தயாரிப்பு அவற்றின் விநியோகம், மருத்துவத்தொழில் மற்றும் உயிரி தொழில் நுட்பம் , மாற்று மருத்துவம் என பல்வேறு சுகாதாரம் சார்ந்த தொழில் மற்றும் நிர்வாக சேவை யில் அவசியமான கருத்திற்க்கொள்ள வேண்டிய துறை சப்ளை செயின் மேனேஜ்மெண்ட். அதனைப் பற்றிய சரியான புரிதல் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்றாகத் திகழ்கிறது.
இதனைக் கருத்திற்க்கொண்டு சென்னை, தி சங்கர நேத்ராலயா அகாடெமி “சுகாதாரத் துறையில் தொடர் விநியோக மேலாண்மை(Supply
Chain Management in Healthcare Sector)” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ளார்கள்.
நிகழ்ச்சியில் சங்கர நேத்ராலயாவின் சீனியர் பொது மேலாளர் மற்றும் தி சங்கர நேத்ராலயா அகாடெமியின் பதிவளர் திருமதி அகிலா கணேசன் மருத்துவத்துறை சார்ந்த கல்விப்பணியில் சங்கர நேத்ராலயா மற்றும் தி சங்கர நேத்ராலயா அகாடெமியின் தன் முயற்சிகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி உரையாற்றுகிறார்.
சி.ஐ.ஐ. லாகிஸ்டிக் நிறுவனத்தின் தலைவர் திரு கே வி மஹிதர் ” லாகிஸ்டிக் அண்ட் சப்ளை செயின் மேனேஜ்மெண்ட் கல்வியில் சி.ஐ.ஐ. லாகிஸ்டிக் நிறுவனத்தின் பங்களிப்பினைப் பற்றி” உரையாற்றுகிறார்.
சி.ஐ.ஐ. லாகிஸ்டிக் நிறுவனத்தின் ஆலோசகர் முனைவர் டி வி சுப்ரமணியம் அவர்கள் “சப்ளை செயின் மேனேஜ்மெண்ட்டின் கூறுகள்
(Components of supply chain management)” என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
அப்போலோ மருத்துவமனையின் மெட்டீரியல்ஸ் துறை பொது மேலாளர் திரு கே நாகப்பன் அவர்கள் “சுகாதாரத்துறையில் சப்ளை செயின் மேனேஜ்மெண்ட்டின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில உரையாற்றுகிறார்.
கேள்வி பதில் நேரத்தினைத் தொடர்ந்து சப்ளை செயின் மேனேஜ்மெண்ட் குறித்த எதிர்காலத்ட்திடங்கள் மற்றும் கருத்தரங்கினை நிறைவு உரையினை தி சங்கர நேத்ராலயா அகாதெமியின் துணை மேலாளர் திருமதி ஸ்ரீதேவி வழங்குகிறார்.
மருத்துவமனைகளின் நிர்வாக அதிகாரிகள்,
மேலாளர்கள்,
ஆர்வம் மிக்க மருத்துவர்கள்,
சுகாதாரத்துறையில் பணியாற்றும் சார்பு அலுவலர்கள்,
சுகாதாரத்துறையில் பணியாற்ற விரும்பும் பட்டதாரிகள்,
மேலாண்மைத்துறை மாணவர்கள்,
அனைவருக்கும் இந்த கருத்தரங்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
அனுமதி இலவசம் ஆனாலும் முன்பதிவு செய்து கொள்வது நல்லது.
முன் பதிவு ம்ற்றும் மேலும் விவரங்களுக்கு:
ிருமதி நான்சி
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்,
தி சங்கர நேத்ராலயா அகாடெமி,
தொலைபேசி எண் : 044
4908 6017 / 98841 85257
No comments:
Post a Comment