Tuesday, September 3, 2013

குறுகிய கால மருத்துவ செயலாளர் பயிற்சி


செய்திக்குறிப்பு

 

தி சங்கர நேத்ராலயா அகாடெமி

நடத்தும்

குறுகிய கால மருத்துவ செயலாளர் பயிற்சி

 

சங்கர நேத்ராலயா அகாதெமியின் சார்பில் நடத்தப்படும் குறுகிய கால  மருத்துவ செயலாளர் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

மருத்துவமனையில் டாக்டர்களுக்கும் நோயாளிகளுக்கும் ஓர் இணைப்புப் பாலமாக செயல்படுபவர்கள் மருத்துவ செயலாளர்கள். மருத்துவமனைகளின் அடிப்படை சூழல்கள், மருத்துவ வழிகாட்டிகளுக்குத் தேவையான திறமைகள், உடல் உறுப்புகளின் அமைப்புகள் மற்றும் இயல்புகள் குறித்த தகவல்கள், மருத்துவ சொற்கள், அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி, நிர்வாகம், சேவை முறைகள், தகவல் தொடர்பு திறன் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

 

2 வார சான்றிதழ் படிப்பான இதில் 25 வயதுக்குட்பட்ட, ஏதேனும் பட்டப்படிப்பு படித்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேற்கூறிய தகுதியுடன் மருத்துவமனைகளில் வரவேற்பாளராக, செயலாளர்களாக, டாக்டர்களின் உதவியாளராக பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள் மற்றும் ஏற்கெனவே பணியாற்றுபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செப்டம்பர் 20-ம் தேதிக்குள் சென்று சேர வேண்டும். அக்டோபர் 2 வது வாரத்தில் பயிற்சி தொடங்க உள்ளது.

 

பயிற்சி கட்டணம்: ரூபாய்:  10000/- (பாடங்கள் மற்றும் சான்றிதழ் -க்காக) கட்டணம் Medical Research Foundation" என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க செக்/டிராஃப்ட் ஆக வழங்க வேண்டும்.

 

விண்ணப்பங்கள் மற்றும் மேலும் விவரங்களுக்கு கவனிக்கவேண்டிய வலைத்தளம்: www.thesnacademy.ac.in


 


 

மேலும் விவரங்களுக்கு;


 


திரு அ மகாலிங்கம்,


அகாதெமி அதிகாரி/ தி சங்கர நேத்ராலயா அகாடெமி


தொலைபேசி எண்கள்: (0) 97104 8529 /இ-மெயில்: mahali@snsmail.org


 

No comments:

Post a Comment